ஆசிச்செய்தி

'ஒரு தேசத்தில் அபிவிருத்தியின் முதுகெலும்பு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களே' 

ஆரம்ப காலத்தில் வடக்குகிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்து, ஒரே மாகாணசபையாக இயங்கிய காலப்பகுதியில் 'இலங்கை தொழில்நுட்பவியல் சேவைச்சங்கம் வடக்குகிழக்கு மாகாணம்' என்ற பெயரில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்து செயற்பட்டு வந்தது. அத் தொழிற்சங்கம் இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்படும் வரையில் சிறப்பாகச் செயற்பட்டு வந்தது. அத் தொழிற்சங்கத்தின் எதிர்பார்ப்பும் நோக்கமும் மாகாண அரச சேவையிலுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நலனிற்காகவும், மேம்பாட்டிற்காகவும் முன்னின்று உழைப்பதே ஆகும். 

பின்னர் மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதன் காரணமாக, இந் நோக்கங்களை அடைவதற்காக நாம் 'இலங்கை தொழில் நுட்பவியல் சேவை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் கிழக்கு மாகாணம்' என்ற பெயரில் புதிதாக எமது தற்போதய தொழிற்சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். தற்போது எமது மாகாணத்திற்குட்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நலன்களில் குறிப்பாக பரீட்சைகள், பதவி உயர்வுகள், நியமனவெற்றிடங்கள், இடமாற்றங்கள், பயிற்;சிநெறிகள் மற்றும் அரசிடமிருந்து பெறக்கூடிய சலுகைகள் போன்றவற்றைப் போராடியும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றோம். 

அந்தவகையில், தற்போது வடக்கு மாகாணத்தில் சிறப்புற ஆரம்பிக்கப்பட்டு அம்மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் 'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்' என்னும் தொழிற் சங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இச்சங்கத்தினை ஆரம்பிப்பதற்காக முழு மூச்சாகச் செயற்ப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களை கிழக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சார்பாக நான் மனதாரப் பாராட்டுகின்றேன். மேலும் இத் தொழிற் சங்கமானது ஒருபடி மேற்சென்று தனக்கானதோர் இணையத்தளத்தினை வடிவமைத்து ஆரம்பித்திருப்பது இக் காலத்தின் தேவையாகும். இவ் இணையத்தள அங்குரார்பண நிகழ்வானது இனிதே நடைபெற எமது தொழிற் சங்கத்தின் சார்பாக எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

இப்புதிய தொழிற் சங்கமானது எமது கிழக்கு மாகாண தொழிற் சங்கத்துடன் இணைந்து கைகோர்த்து தொடர்புகளைப் பேணித் தெடர்ந்து செயற்பட வேண்டும். இதற்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். அவ்வாறே நாம் கொழும்பிலுள்ள 'இலங்கை தொழில் நுட்பவியலாளர்கள் சம்மேளத்துடனும்' தொடர்புகளை மேம்படுத்திச் செயற்பட்டு வருதல் வேண்டும். 

அந்த வகையில் 'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்' என்னும் தொழிற் சங்கமானது. சகல தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின்; மேம்பாட்டில் கூடிய அக்கறை செலுத்தி தனது முன்மாதிரியான செயற்ப்பாட்டடினூடாக அனைவருக்கும் சிறந்த சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். 

 'தேசமானி' நவரட்ணம் ராஜிதன் (J.P)
தலைவர்,
'இலங்கை தொழில்நுட்பவியல் சேவை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம்',
கிழக்கு மாகாணம்.
2021.09.16  

Share This :