'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்';
நீண்டகாலத்திற்குப் பின்னர் வடக்கு மாகாண அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான புதிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொழிற்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
இத் தொழிற்ச்சங்கத்தின் மூலம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நலம் சார்ந்த பலவிடயங்களை பெறமுடியுமென எதிர்பார்க்கின்றேன், முக்கியமாக பதவி உயர்வு, சேவைமூப்பு அடிப்படையிலான பதவிஉயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம், பரீட்சைகள் போன்றனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இச் சங்க உறுப்பினர்களில் பலர் எனது முன்னைய மாணவர்களாய் இருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இச் சங்கம் மேன்மேலும் வளர்ச்சி அடைந்து உறுப்பினர்களிற்கு மட்டும்; அல்லாது பொதுமக்களுக்கும் சிறந்த சேவையாற்றுவதோடு அரச அபிவிருத்தித் திட்டங்களையும் சிறந்த முறையில் மேற்க்கொண்டு சங்க உறுப்பினர்கள் நன்மதிப்பைப் பெற்று மென்மேலும் வளர்ச்சி பெறவேண்டும் என்று நான் மனமுவந்து வாழ்த்துகின்றேன்.
மேலும், தொழிற்சங்கத்திற்கான இணையத்தளத்தினை வடிவமைத்து ஆரம்பித்திருப்பது இக் காலத்தின் தேவையாகும். இவ் இணையத்தள அங்குரார்பண நிகழ்வானது சிறப்புற எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஆசியுரைவழங்குபவர்
புண்ணியமூர்த்தி சண்முகதாசன்
முன்னாள் பகுதித் தலைவர்
பொறியியல் பீடம்
தொழில்நுட்பவியல் கல்லூரி
கொக்குவில்.