ஆசிச்செய்தி

'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்';
புதிய தளத்தில் கால்பதிக்கும் முயற்சியான இணையத்தள அங்குரார்ப்பணத்திற்கு நல்வாழ்த்துக்கள் 

ஏற்றமிகு இலங்கை வடமாகாணத்தின் 
அரசதொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கம்
ஆற்றல்மிக வாண்மைகளை விருத்திசெய்ய
 அங்கத்தவர் நலன்களொடு சலுகைபேண
தோற்றியதே ஜந்தைந்து இருபத்தொன்றில்
 தொழிற்சங்க மெனவும் நல்லங்கீகாரம்
ஏற்றமுற இணையத்தில் கால்பதிக்கும்
 எழில் வளர்ச்சித் தடங்கள் என்றும் வாழ்க நன்றே! 

மின்னியலும் குடிசார்பும் எந்திரவியலும்
மேலான முத்துறையால் வட மாகாணத்தில்
பன்னுமொரு பணிபுரிந்து பலரும் போற்ற
பெருமையுடன் நேர்மை, திறன் உயரக்கானும்
மன்னுமொரு மக்கள்நலன் பேணிக்காத்து
மாண்புறுதல் சேவைஎன மகிழ்ந்துபோற்ற
தன்னிகரில் உறுப்பினர்கள் நலன்கள்பேணி
தரணிமிசை உயர்தரமாய் வாழி!வாழி! 

தொழில்நுட்பத் துறையிடத்தே கவணம் ஈர்க்கும்
துறைபோன அனுபவமும் அறிவும் கொண்டு
எழில்மிகுந்த அபிவிருத்திப் பணிகள் பலவும்
மாகாண சபையுடனே கூடி நாளும்
வழிதுறையாய் வண்ணமுற நாளும் நல்கி
எதிர்காலம் ஒளிமிளிரக் கொள்கைத்திட்டம்
வழிசமைத்தே பசுமைமிகுகாலம் தருவீர்!
 வளமாக உளமார வாழ்கநன்றே!

சுபம்! 

அன்புடன் வாழ்த்தும்,
 பு.கிருபாகரன் 

Share This :