December 18, 2021

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம் அங்கத்தவர்கள் ஒருங்கிணைவு - 2021

 எமது தொழிற்சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களிடையேயான 2021ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஒருங்கிணைவு நிகழ்வானது இன்று (18.12.2021) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இனிதே ஆரம்பமாகி நடைபெற்றது. 

எமது தொழிற்சங்க அங்கத்தவர்கள் அனைவரும் நீலநிற தொழிற்சங்க T-SHIRT அணிந்து வருகை தந்தனர். அங்கத்தவர்களின் வரவுடன் பிரதமவிருந்தினர் “தேசமானி” நவரட்ணம் ராஜிதன்(J.P) அவர்கள் எமது நிர்வாக சபை உறுப்பினர்களினால் வரவேற்கப்பட்டு நிகழ்ச்சிமேடைக்கு அழைத்துவரப்பட்டார். அதனைத் தொடர்ந்து குறிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் படி மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகியது. 

 வரேவேற்புரை, தலைவர்உரை, உபதலைவர்உரை ,பிரதமவிருந்தினர் உரை, அனுசரணையாளர்கள் கௌரவிப்பு, பிரதம விருந்தினரை கௌரவித்தல், கலந்துரையாடலில் குறிப்பாக எமது இணையத்தத்தில்   Register/Login செய்யும் முறைபற்றியும், அதனுள் உள்ள விடயங்கள் பற்றியும் பூரணவிளக்கமளிக்கப்பட்டதுடன், ECSL இல் பொறியியல் தொழிலாளராக பதிவு செய்வதற்கான சட்டநிலமைகள் பற்றியும், தேவைப்பாடுகள் பற்றியும் உப தலைவரால் பூரணமான தொரு விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பான வர்த்தமானிப் பத்திரியையும், சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம் என்பன திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.  அதனுடைய பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டது. முக்கிய விடயமாக குறித்த பதிவானது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாலும் 31.12.2021 ஆம் திகதியுடன் அதற்கான காலம் நிறைவடைவதாலும் விண்ணப்பிப்பதற்கான காலநேரம் போதாமையால் விண்ணப்பத்திற்கு தேவையான புகைப்படமானது இன்றையதினமே நிகழ்ச்சியில் எடுப்பதற்குரிய ஒழுங்குகள் தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். 

இறுதியாக நன்றி உரையுடன் தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் மதியபோசனத்துடன் மதியம் 2.00 மணியளவில் வருடாந்த ஒருங்கிணைவு நிகழ்வானது சிறப்பாக இனிதே நிறைவேறியது. 

Share This :