July 27, 2026 இலங்கையில் 2026 ஜூலை 27 முதல் 31 வரை
“நேர்மையின் பண்பாடு – தூய்மையான இலங்கை” (A Culture of Integrity – A Clean Sri Lanka)
என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கம், அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வலுப்படுத்துவதாகும்.
இந்த வாரத்தின் தினசரி கருப்பொருள்கள்:
* ஜூலை 27 (திங்கள்): நிறுவன நேர்மை மேம்பாட்டு நாள்
* ஜூலை 28 (செவ்வாய்): நிதி, டிஜிட்டல், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப நேர்மை நாள்
* ஜூலை 29 (புதன்): ஆன்மீக, ஒழுக்க, கலாசார மற்றும் சமூக நேர்மை நாள்
* ஜூலை 30 (வியாழன்): செயற்பாடு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மை நாள்
* ஜூலை 31 (வெள்ளி): சுற்றுச்சூழல், வள முகாமை, கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை நாள்
இந்த வாரத்தின் தொடக்க நாளில் (27.07.2026), அரச நிறுவனங்களில் தேசிய நேர்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுவதுடன், ஒழுக்க நெறிக் கோவை (Code of Ethics) அறிமுகப்படுத்தப்படுகிறது.