January 15, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு - 05

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் ஐந்தாவது தொடர் 2022.01.17 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் "இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுமானத் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்"  தொடர்பாக கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்த்துறைப்  பேராசிரியர் - கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

 இந் நிகழ்வில் கலந்துரையாடப்படும் விடயங்கள் ஸ்ரீ-ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வகுப்பு தொழில்நுட்ப அலுவலர்களுக்கான மூன்றாவது வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சையின்(3rd EB)  முகாமைத்துவம் சார்ந்த பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Zoom link : 

https://learn.zoom.us/j/65231150608?pwd=UHB6WUtVMjFaZVhQWElBNU05T2tGQT09


Meeting ID:    652 3115 0608

 Passcode:      bf?SY6=3



Share This :