April 22, 2024

உலக புவி தினம் - 2024 ( World Earth Day -2024 )

பூமி நாள் என்றால் என்ன.?

முதல் பூமி நாள் 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி  கொண்டாடப்பட்டது. 1960களின் பிற்பகுதியில் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்பட்டன. பூமி தினத்திற்கான யோசனை முதலில் 1969 இல் பிறந்தது.1969 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் இயற்கை ஆர்வலர் ஜான் மெக்கானல் பூமி தினத்தை கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து, கெய்லார்ட் நெல்சன் என்ற அமெரிக்க செனட்டர், அமெரிக்காவின் சாண்டா பார்பராவில் ஒரு பெரிய எண்ணெய் கசிவின் விளைவுகளை கண்டு வேதனை அடைந்தார். 1970 இல் சுற்றுச்சூழலுக்கான நிலைப்பாட்டை எடுக்க அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். மேலும் அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆரோக்கியமான, நிலையான பூமிக்காக போராட்டங்களை ஏற்பாடு செய்தன. இந்த தேசிய பேரணிகள் காரணமாக, முதல் பூமி தினம் கொண்டாட வழிவகை செய்தது.. மேலும் அமெரிக்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை என்ற அமைப்பை உருவாக்க உதவியது.. 

  அமெரிக்க நாட்டு செனட் உறுப்பினராக இருந்து கெய்லார்ட் நெல்சன் ஏப்ரல் 22 ஆம் நாளன்று சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார். அதற்கு பூமி தின விழிப்புணர்வு என்று பெயரும் வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினம் (World Earth Day) கொண்டாடப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

2024  Google Doodle for Earth Day: "இன்னுயிர்யெல்லாம் இனிமையாய் வாழ்ந்திடும் என் மேனியில் பூமி.." பூமி தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்..!


அழிவை நோக்கி போகும் பூமி: 

சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லாததால் பூமி அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது. இந்த ஆண்டு பூமி தின கருப்பொருளாக பிளானட் Vs பிளாஸ்டிக் (Planet Vs Plastics) கூறப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிர பிரச்சினை மற்றும் அது இயற்கைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதற்கு கவனத்தை ஈர்ப்பதை  2024 நோக்கமாகக் கொண்டுள்ளது.
 2024 ஆம் ஆண்டு பூமி தினத்திற்காக, EARTHDAY.ORG கிரக ஆரோக்கியத்திற்கான பிளாஸ்டிக்கை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் 2040 க்குள் அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியிலும் 60 சதவீதம் குறைப்பைக் கோருகிறது.

மனிதர்களின் செயற்கையான செயல்பாட்டால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இப்போது பிரச்னை என்னவென்றால், மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்.

உலக பூமி தினம் 2024 செய்ய வேண்டிய நடவடிக்கைகள்:

பூமி தினம் நமது கிரகத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், இந்த நாளை சிறப்பானதாக மாற்ற நீங்கள் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, இயற்கை நடைப்பயணங்கள், உங்கள் கார்பன் தடம் குறைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது, சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கான வழிகள் குறித்து உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கல்வி கற்பது மற்றும் பலவற்றை நீங்கள் உறுதியளிக்கலாம். குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான கொள்கைகளையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம் மற்றும் அவற்றை உங்கள் வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்கலாம்.

Last Year - 2023

2023 ஆம் ஆண்டிற்கான புவி தினத்திற்கான கருப்பொருள் "எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்" (Invest in our planet,) என்பதாகும்.
இதை தொடர்ந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனாலும் கூட காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் 2030 - 2050 ஆண்டு வரை சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மறுபுறம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 2100-ம் ஆண்டுக்குள், உலகில் காலநிலை பிரச்சனைகள் அதிகமாகும் என்றும், மேகவெடிப்பு, சுனாமி, பெருவெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பல நாடுகள் அழியக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.. எனவே இந்த பூமி தினத்தில் பூமியை காக்க வேண்டும் அனைவரும் உறுதியேற்று, தங்களால் முடிந்த சிறிய மாற்றங்களை செயல்படுத்துவோம்.. மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.. 


Share This :