June 30, 2025

அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ( சி/ மெ/மி) சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் - பதுளை 2025

கடந்த 27.6.2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற "அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ( சி/ மெ/மி) சங்கத்தின்" வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் பதுளை மாநகரசபையின் " சைமன் பீரிஸ்" மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் நாடளாவிய ரீதியில் 26 சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கெடுத்தனர். 

 இந்நிகழ்வில் கெளரவ பொது நிருவாக மாகாண சபைகள் அமைச்சர், கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபயரத்ன, மற்றும் பொருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கெளரவ சமந்த வித்தியரட்ண மற்றும் மாநகர மேயர், ஊவா மாகாணசபை கெளரவ அளுநர் செயலாளர், மற்றும் பிரதிபிரதம செயலாளர் (பொறியியல்), வீதி,நீர்ப்பாசனம் மற்றும் கட்டடங்கள் திணைக்கள பணிப்பாளர்கள், மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

 1. தொழில்நுட்ப சேவை தனிச்சிறப்பு வாய்ந்த சேவையாக பிரகடனப்படுத்துதல். 

 2. புதிய சம்பளத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை நீக்குதல். 

 3. தொழில்நுட்ப உத்தியோகத்தர் வகுப்பு - I ஐ தனியாக வகைப்படுத்தி பதவிநிலைக்கு உட்படுத்துதல். 

4. விரைவிவாக மத்திய மற்றும் மாகாண சபைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதல். 

  5. களப் பயணத்திற்கான பிரயாணப்படித் தொகையை உடனடியாக மீளாய்வு செய்து அதனை அதிகரித்தல்

 6. புதிய 2025 வர்த்தமானி சேவைக் குறிப்பினால் பாதிக்கபடுபவர்களுக்கு நிவாரணம் மற்றும் பரீட்சை நடத்துதல். 

 7. தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தொலைபேசிக்கான கொடுப்பனவு  வழங்குதல். .

  8. தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான விசேட களக் கொடுப்பனவு (உயர்மட்ட) வழங்குதல்.

 9. பொறியியல் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதில் காணப்படும் தடைகளை மற்றும் தலையீடுகளைக் களைதல். 

10. பரீட்சை முறைகள் தொடர்பாக விபரங்களை விரைவாகத் தெளிவுபடுத்துதல்


 உட்பட பல கோரிக்கைகள் கெளரவ அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 புதிய செயற்குழு தெரிவுடன் மாலை 4மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது. 

- நன்றி -


Share This :