October 12, 2025

வருடாந்த பொதுக்கூட்டம் - 2024/2025

எமது இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (SLGTOU-NP) 2024/2025 ம் நிதியாண்டிற்கான வருடாந்தப் பொதுகூட்டமானது கடந்த 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கேசன் துறை வீதி. நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள " திவ்ய மஹால்" திருமண மண்டபத்தில் காலை 10.01 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தலைமையுரையினைத் தொடர்ந்து கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஓய்வுபெற்றவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டது போல் இவ்வருடமும் ஓய்வுபெற்ற எமது தொழிற்சங்கத்தின் அங்கத்தவரும், முன்னாள் தலைவருமாகிய ( 2024-2025) "திரு. பாக்கியநாதர் தியோஜினஸ்" அவர்கள் 28 ஆண்டுகள் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட திணைக்களங்களில் தனது வினைத்திறனான சேவையை ஆற்றியமையைப் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். 

 அத்துடன் கடந்த கால செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன் கணக்காய்வாளரினால் அவரது கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பன உரையும் இடம்பெற்றது. 

 மேலும் புதிய பல ஆக்கபூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

 தொடர்ந்து மதியபோசன நிழ்வுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. 

 நன்றி 

 இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கம் - வடக்கு மாகாணம் 

SLGTOU-NP

Share This :