வடக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் 15.03.2026 அன்று இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட “வடக்கு மாகாண தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (தரம்-III) மற்றும் படவரைஞர் பதவிகளுக்கு” ஆட்சேர்ப்பு செய்வதற்காக இடம்பெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் 10.04.2026 அன்று வடக்குமாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகத் தேர்விற்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் படவரைஞர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் 28.04.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணசபையில் இடம்பெறவுள்ளது.
இந் நியமனங்களின் மூலம், வடக்கு மாகாண சபையில் மிகநீண்டகாலமாக நிரப்பப்படாதிருந்த பெரும்பாலான வெற்றிடங்கள் நிரப்பப் படுவதுடன், திணைக்களங்கள் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை சிறப்பாக மேற்கொள்ளக்கூடியதாக அமைகிறது.
இப் புதிய நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து உத்தியோகத்தர்களையும் " இலங்கை அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணம் (SLGTOU-NP), மற்றும் அகில இலங்கை “அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (சிவில்/எலக்றிக்கல் /மெக்கானிக்கல்) சங்கங்களின் சம்மேளனம்” ஆகியவை அன்புடன் வரவேற்று எதிர்காலம் சிறக்க நல்-வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றன. ++
Visit related news
இலங்கை அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணம்
Sri
Lanka Government Technical Officers Union - Northern Province (SLGTOU-NP)
மற்றும்
"அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ((சிவில்/எலக்றிக்கல் /மெக்கானிக்கல்) சங்கங்களின் சம்மேளனம் - கொழும்பு.
Government Technical Officers (Civil/Electrical /Mechanical) Association
(GTOA) - Sri Lanka