September 17, 2021 'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணத்தின்'; உத்தியோகபூர்வ இணையத் தளமானது 2021.09.16 ஆம் திகதி வியாழக்கிழமை சுபநேரத்தில் உத்தியோகபூர்வமாக யாழ் மண்ணில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எமது புகழ்பூத்த 'தொழில்நுட்பவியல் பேராசான்'; பெருமதிப்பிற்குரிய திரு. புண்ணியமூர்த்தி சண்முகதாசன் அவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டு எமது இணையத்தளத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். எமது இணையத்தளத்தின் ஊடாக எதிர் வரும் காலங்களில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் திறன் விருத்தி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.